பக்கம்:இலக்கண வரலாறு.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303


பணி - சமயம்

கற்பன கற்ற இவர், “யாம் சென்னைக்குச் சென்று இலக்கணப் பயிரிடப் போகின்றோம்” என்று கூறிச் சென்றார். சென்னை வண்ணாரப்பேட்டையில் தங்கினார். அப்பேட்டை வழியே சென்ற ஒரு கட்டை வண்டியின் பாரச் சமநிலைக்காகப் போடப்பட்டிருந்த கல்லைக் கண்டார். அஃது அனுமார் சிலையாக இருக்கக் கண்டு அதனை வாங்கி ஆங்கிருந்த பிள்ளையார் கோயிலில் வைத்தார். அதற்குச் ‘சஞ்சீவிராயன்’ என்று பெயரும் சூட்டினார். அதனால் அத்தெரு சஞ்சீவிராயன் தெரு என்றும், அப்பேட்டை சஞ்சீவிராயன் பேட்டை என்றும் வழங்கலாயின. இராமாநுசர் மாலிய (வைணவ) சமயத்தார் என்பது கருதத் தக்கது.

மாணவர்

எண்கவனகர் வீராசாமிச் செட்டியார், களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர், துரு ஐயர் (Rev. W. H. Drew) தாமசன் கிளார்க் (Thomson clarke) இராசசு (Rev. I. B. Rodgers) போப்பையர், இரேனி யூசையர் ஆகியோர் இவரிடம் தமிழ் பயின்றனர்.

நூல்கள்

இவர் எழுதிய நன்னூற் காண்டிகை 1847இல் அச்சாகியது. ஆத்மபோதம் (1840) இலக்கணச் சுருக்கம் (1848) ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை முதலிய நூல்களுக்கு உரையெழுதினார்; திருக்குறள் 63 அதிகாரங்களுக்கு உரையெழுதி துரு ஐயர் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டார். வின்சுலோ ஆங்கிலத் தமிழ் அகராதி எழுத உதவினார். மேலும் திருவேங்கட அனுபூதி, பார்த்தசாரதி பதம்புனை பாமாலை, வரதராசர் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/348&oldid=1474286" இலிருந்து மீள்விக்கப்பட்டது