பக்கம்:இலக்கண வரலாறு.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307

1847 என்பார் மயிலை சீனிவேங்கடசாமி (19 நூ. ஆ.). கா. ர. கோவிந்தராச முதலியார் குறிப்புரையுடன் 1940 இல் புதிய பதிப்பு வந்தது.

எ. விசாகப் பெருமாளையர் உரை

காலம் - சமயம்

திருத்தணிகை விசாகப் பெருமாளையர் என்பார் இவர். திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இவர் இளவலார். இவர்தம் தந்தையார் கந்தப்பையர் என்பார்; வீர சைவர். இராமாநுசக் கவிராயரிடம் கல்வி பயின்றவர். இவர் காலம் 19-ஆம் நூற்றாண்டு.

பணி

“கனம் பொருத்திய கம்பேனியாரால் நியமிக்கப்பட்ட யூனிவர்ஸிட்டி என்னும் சகலகலா சாஸ்திரி சாலையில்” தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். இலக்கணச் சுருக்க வினாவிடை, பாலபோத இலக்கணம், யாப்பிலக்கண வசனம், அணியிலக்கண வசனம் ஆகிய நூல்களை இயற்றினார். திருக்கோவையாருக்கு உரையெழுதினார். நன்னூலுக்கு இவர் இயற்றிய காண்டிகையுரை 1875 இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்பு 1879 இல் வெளிவந்தது.

உரை

இவருரை முக்காண்டிகையுரை எனப்பட்டது. கருத்துரை, சொற்பொருள், எடுத்துக்காட்டு என்னும் மூன்றும் உடைமையால் அப்பெயர் பெற்றது.

1879-ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பில் ‘மாணவர்க்குக் குறிப்புகள்’ (A Hint to Students) உள்ளன. கலை இளைஞர்க்கு (B. A.) நூன் முழுமையும் பயில வேண்டும் என்றும், F. A. என்னும் இடைநிலை வகுப்புக்கும், உயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/352&oldid=1474290" இலிருந்து மீள்விக்கப்பட்டது