பக்கம்:இலக்கண வரலாறு.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309

 தேர்வதற்கு இவைகள் பெருந்துணையெனக் கொள்ளப்படும் பொருத்தமுடைமையானும் எனின் அதனை ஓர் தவறெனக் கற்றோர் கொள்ளார்” என வரும் பதிப்புரை இதனை விளக்கும்.

உரை நிலை

இவருரை நிலையை விளக்கும் உரைப்பாயிரத்தின் பகுதி வருமாறு; இதனை இயற்றியவர் சேயூர் முத்தையா முதலியார்:

"நன்னூற்கு,
நயன்மிகு சங்கர நமச்சி வாயனால்
பயன்மிகச் செய்திடப் பட்ட பின்னர்
தவஞா னந்தனிற் சால்புகூர் துறைசைச்
சிவஞான முனிவனால் திருத்திடப் பட்ட
விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கிக்
கருத்துப் பதப்பொருள் காட்டுமற் றுஞ்சில
உறுமுறை காண்டிகை யுரையுளங் கொண்டு
சிறுவரும் உணர்தரும் செவ்வியிற் செய்தனன்
தத்துவ முணர்திருத் தணிகை மடாதிபன்
சத்தெனும் வீரசைவமா கேசன்
கற்றுணர்ந் தோங்கிய கந்தப்ப தேசிகன்
பெற்றருள் விசாகப் பெருமான் ஐயனென்
றுலகு புகழ்தர ஓங்கி
இலகும் இயற்பெயர் எய்துநா வலனே"

ஏ. ஆறுமுக நாவலருரை

காலம் - சமயம்

நாடறிந்த புகழாளர் ஆறுமுக நாவலர்; பெயரைச் கட்டிக் கூறாமல் நாவலர் என்றாலே இவரைக் குறிக்கும் சிறப்பினர். சைவத் தொண்டுக்கெனவே தம் பிறவியைப் பயன்படுத்தியவர். இவர் காலம் 1823 - 1879.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/354&oldid=1474292" இலிருந்து மீள்விக்கப்பட்டது