பக்கம்:இலக்கண வரலாறு.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312


(1) “மாணாக்கர் நாடோறும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட பாடத்தை, உபாத்தியாயரிடத்தே கேட்கு முன்னரே வீட்டிலே அவதானத்தோடு பலமுறை வாசித்துச் சூத்திரத்தை நெட்டுருப்பண்ணிக் கொள்ளல் வேண்டும்”.

(10) “பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் இலக்கணப் பிழையறப் பேசவும் எழுதவும் பழகல் வேண்டும். பிழைபடப் பேசினும் எழுதினும் இலக்கணக் கல்வியாற் பயன் ஒரு சிறிதும் இல்லை . பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் எல்லாருக்கும் பொருள் விளங்கத்தக்க இயற் சொற்களை வழங்கல் வேண்டும்”.

(II) “இலக்கணப் பிழையுடைய வசனங்களையும் செய்யுள்களையும் திருத்தப்பழகல் வேண்டும்”.

இவரியற்றிய இலக்கணச் சுருக்கம் நன்னூல் உரைநடை ஆக்கமாக எழுத்து சொல் இலக்கணங்களை விளக்குகிறது. 406 தலைப்புகளில் இலக்கணம் அமைந்தது ‘பரீக்ஷை வினா’ என ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துளது. இதன் இருபத்திரண்டாம் பதிப்பு 1953 -ஆம் ஆண்டில் வெளிவந்தது.

ஐ. சடகோப ராமாநுசா சாரியார்

வரலாறு

மாணவர் பயிற்சிக்கென நன்னூலுக்கு உரைகண்டவருள் இவர் ஒருவர். இவர் தந்தையார் அப்பனையங்கார். சென்னைத் திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். சமயம் வைணவம். காலம் 1871-1910.

நோக்கு

அரசினர் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் இடர்ப்பாடு இல்லாமல் எளிமையாக இலக்கணத்தை, அறிந்து கொள்ளும் வகையில் பாட நூலாகவும்— அதே பொழுதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/357&oldid=1474295" இலிருந்து மீள்விக்கப்பட்டது