பக்கம்:இலக்கண வரலாறு.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

வெளிக் கொணர்ந்தவர் தாண்டவராய முதலியார், 1864 இல் நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் அத்தகைய தொரு மூலப்பதிப்பு வெளியிட்டார்.

1878, 1879 ஆகிய ஆண்டுகளில் வைத்தியலிங்கம் பிள்ளை பதிப்பும், மற்றொரு பதிப்பும் வந்துள்ளன. இவை உரையொடு கூடிய பதிப்புகள். 1907 இல் தெல்லிப் பாழை சிவாநந்தையர் உரையுடன் பதிப்பித்தார். 13131913 இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு வந்தது. அதனைச் செப்பஞ் செய்து வெளியிட்டவர் சங்கத் தலைமையாசிரியர் உ. வே. திருநாராயண ஐயங்கார்.

சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளை, தி. த. கனக சுந்தரம் பிள்ளை ஆகியவர்கள் எழுதிய புத்துரையொன்று பரிதாபி ஆண்டு, கார்த்திகையில் வெளி வந்தது. கழகத்தின் வழியே கா. ர. கோவிந்தராச முதலியார் குறிப்புரையுடன் 1943 இல் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/367&oldid=1474305" இலிருந்து மீள்விக்கப்பட்டது