பக்கம்:இலக்கண வரலாறு.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

கின்றது. பின்னர் நூற்பாத் தொடர்க்குரிய பிண்டப் பொருளைத் துறைவாரியாகத் தனித்தனி யுரைத்து, “அதற்குச் செய்யுள் வருமாறு” என எடுத்துக்காட்டுக் காட்டுகின்றது. எடுத்துக்காட்டில் திருக்கோவையார்க்கு முன்னுரிமை தருகின்றது. எங்கும் அந்நெறியையே போற்றுகின்றது. பின்னர்ப் பாண்டிக்கோவை சங்கப்பாடல் பொருளியல் முதலியவற்றைக் காட்டுகின்றது. திருக்கோவையார்க்கு இவர் தரும் முன்னுரிமை இவர் தம் சார்பைக் காட்ட வல்லது. சிறப்புப் பாயிரம் கடவுள் வாழ்த்து ஆயன இன்மையால் நூலாசிரியர் சமயம் அறிதற்கு வாய்க்கவில்லை. இந்நூலைப் பதின்மூன்றாம் நூற்றாண்டினது என்பர். இதனுரை பதினான்காம் நூற்றாண்டின தாகலாம் என்பர்.
உரையின் சிறப்பு
எடுத்துக் காட்டும் மேற்கோள் இன்னநூலைச் சேர்ந்தது என்பதைத் திட்டமாக உரைக்கும் சீர்மையுடையது உரை. அதனால் ஆய்வுலகம் பெற்றுள்ள நலம் அளப்பரிது என்பது ஆய்வாளர்க்குத் திட்டமாகத் துலங்கும்.
‘இடம் வினாதல்’ என்பது உளங்கவன்றுரைத்த பாங்கன் “எவ்விடத்து? எத்தன்மைத்து? நின்னாற் காணப்பட்ட உரு?” என்று தலைவனை வினாவுதல். அதற்குச் செய்யுள்:
‘இடத்தியல் புரைத்தல்’ என்பது பாங்கற்குத் தலைமகன் கண்ட இடமும் வடிவும் உரைத்தல். அதற்குச் செய்யுள்:
இவ்வாறு செல்கிறது உரை.
ஒவ்வொரு பகுதிக்கும் உரிய எடுத்துக்காட்டுகளை உரைத்து அவற்றின் நிறைவில், “இவையெல்லாம் இவ்விலக்கணத்துள் கண்டு கொள்க” என்று இறையனார் களவியல் நூற்பாக்களைக் காட்டி அப்பகுதியை முற்றுவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/371&oldid=1474308" இலிருந்து மீள்விக்கப்பட்டது