பக்கம்:இலக்கண வரலாறு.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

இதன் பாயிரம்,

“சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தையின் வைத்து முன்னோர் பொருள் நெறி
சுட்டி யுரைப்பன் பாட்டியன் மரபே”

என்பது. இது,

“சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே”

என்னும் தண்டியலங்காரத் தழுவல் என்பது வெளிப்படை.

இவ்வியலில் இன்ன கூறுதும் என மூன்றியல்களிலும் கூறித் தொடங்குகிறார். பிறப்பு வருணம் என முறையே இவர் இவர் நூற்பா இவையென அடுக்கி வைக்கிறார். ஆதலால் இது கூறுவன் என்பது இப்பாட்டியல் தொகுப்பாளர் நூற்பா வெனவும், பிறவெல்லாம் தொகுக்கப்பட்டவை எனவும் கொள்ளக் கிடக்கிறது. அவ்வகையில் பார்த்தால் நூலாசிரியர் தொகுப்பாசிரியர் என்பதே தகும். இனி இப்பாட்டியல் தொகுப்பிலேயே தனித்தும் — இவ்வெண்ணிக்கையில் அடங்காத — நூற் பாக்கள் 159 காட்டப்பட்டுள்ளன. இத்திரகாளியார் பாடல்கள் இவையென ஓரைந்து நூற்பாக்களை ஓரேடு காட்ட, மற்றோர் ஏடு மற்றோரைந்து நூற்பாக்களை அவர் பெயராலேயே காட்டுதலைப் பன்னிருபாட்டியல் பதிப்பாசிரியர் இரா.இராகவ ஐயங்கார் குறிப்பிடுகிறார்.



பாடம்
யானைத் தொழில் பற்றிய ஒரு நூற்பா:

“கிரிசரம் வனசரம் நதிசரம் என்றிவை
நிலைபெறு நிலனென நிறுத்திசி னோரே”
(100)

என்பது. இதற்குச் சங்கச் சுவடியில் பாடம் (முதலடிக்கு)

“மலையே யாறே காடே என்றிவை”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/375&oldid=1474315" இலிருந்து மீள்விக்கப்பட்டது