பக்கம்:இலக்கண வரலாறு.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்றும்’, ‘மதியன்மையாற் சொல் மழலைப் புன்சொல் பெரியர் பொறுப்பர்’ என்றும், கவிவாணர் வள்ளன்மையரைத் தேடி வருவாய் பெற்று வாழ்தற்கு இந்நூல் துணையாயின், அதுவே வரும் பயன் என்றும் இவர் கூறுவன (1-3), நூலியல், அவையடக்கம், நூற்பயன் ஆயவை கூறுவதாம்.


நூல்

நூல் அந்தாதியால் இயல்கின்றது. ஈரிடங்களில் மகடூஉ முன்னிலையுடையதாய் (9.10) அமைகின்றது.

சீர், எழுத்து, பொன், பூ, திரு, திங்கள், மணி, நீர், சொல், கங்கை, வாரணம், குஞ்சரம், உலகு, பார், தேர் என்னும் மங்கலச் சொற்கள் வரப்பாடுதல், இவ்விம் முதலெழுத்துக்களையுடைய பெயருடையார்க்கே என்று கூறுகிறது.


பத்தாம் பாடலாம் இறுதிப் பாடல் வருணம், உண்டி, கதி, கணம் ஆயவற்றை ஆய்ந்து கொள்ளக் கூறுகின்றது.


இவ்வாசிரியர் வண்ணனைத் திறம், 9 ஆம் 10-ஆம் பாடலில் வரும் மகடூஉ முன்னிலை அமைப்பால் புலப்படும்.


எழுத்துகளை ஓர் ஒலிச்சுவை யுண்டாகவும், யாப்பியல் சிறக்கவும் விட்டிசைப்புத் தவிர்க்கவுமாம் வகையில்,


“கிக்கீ சொச்சோக்கள் நந்நாவொடு
அடுத்த நிந்நீ”

என்பன போலக் கூறுகிறார். கி, கீ; சொ, சோ; ந, நா; நீ, நீ; என்னும் எழுத்துகளை அப்படியே கூறாமல் ஒரு சுவை யுண்டாகக் கூறுதல் அறிக. பின்வரும் எழுத்துகளிலும் இம்முறையையே கொண்டுளார்.

உரை


இந்நூலுக்கு ஓருரை உள்ளது. இன்ன நுதலிற்று என்று கூறி, இதன் பொருள் எனப் பிண்டப் பொருளைத்

இ.வ-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/382&oldid=1474341" இலிருந்து மீள்விக்கப்பட்டது