பக்கம்:இலக்கண வரலாறு.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

தெளிவாகத் தருகிறது. திரு என்னும் மங்கலச் சொல்லால் திருமகள் திருவளர் திருப்பதி திருமல்கு திருமன்னு எனவும், திங்கள் என்னும் மங்கலச் சொல்லால் திங்களர் திங்களால் எனவும் பாவிற்கு இசைத்தபடி பாடுக எனச் சிறுசிறு விளக்கங்களும் தருகின்றது.

“இச்செய்யுளுக்குப் பொருள் விளங்கிக் கிடந்தமையின் விரித்துரைத்துக் கொள்க” என்றும் கூறியமைகிறது.

இந்நூல் கூறும் சம்பந்த மாமுனிவர் எவர் என அறிய வாய்ப்பிருந்தால் காலம், சமயம் முதலியன அறிதற்குக் கூடும். இது பதினாறாம் நூற்றாண்டின தாகலாம் என்பர்.

பதிப்பு

வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் இணைத்து 1900 இல் ஒரு பதிப்பு சென்னையில் இருந்து வந்துள்ளது. அவ்வாறே கொ. இராமலிங்கத் தம்பிரான் விளக்கவுரையுடன் கழக வெளியீடாக இது 1935 இல் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/383&oldid=1474342" இலிருந்து மீள்விக்கப்பட்டது