பக்கம்:இலக்கண வரலாறு.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341



வெள்ளை மலர்த் துகில்புனைந்து தவிசின் மேவி
        வேறுமொரு தவிசிருத்திச் செய்யுள் கேட்டே
உள்ளமகிழ் பொன்புவிபூண் ஆடை மற்றும்
        உதவியே ழடிபுலவன் உடன் போய் மீளே."

"உடம்படச்செய் யான்செய்யுட் பிறர்பாற் கூறில்
        உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கு மன்றித்
திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித்
        தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்
திடத்தனில்அங் கவன் றன்னை நினைந்து சுட்டால்
        ஈராறு திங்கள்தனில் இறுதி யாவன்
தொடர்ந்துசெயா துளநொந்தால் சுற்றத்தோடும்
        தொலைவனிஃ துண்மையகத் தியன்தன் சொல்லே."

"அகத்தியன்சொல் எழுத்துமுதல் குற்றம் செய்யுட்
        கமையாமல் தொடை கொண்டால் அடையும் செல்வம்
அகத்துயர்நோய் அகலும்அக லாது சுற்றம்
        வாணாளும் அதிகம்வழி மரபு நீடும்
தொகைக்குற்றம் புரட்டுறிற்செல் வம்போம் நோயாம்
        சுற்றமறும் மரணமுறும் சோரும் காலும்
சகத்தவர்க்கீ தன்றியே தேவர்க் காகிற்
        றப்பாதிப் பலன்கவிதை சாற்றி னார்க்கே."

குறிப்பு

அரங்கேற்றம் பற்றிய பல செய்திகள் அடங்கியுள்ளமை அறியத்தக்கன. “அச்சமே கீழ்களது ஆசாரம்" என்பதற்கு ஏற்ப அச்சுறுத்தி வழிப்படுத்தும் வகையாக அரங்கேற்றச் செய்திகள் இருந்தமை ஆயத்தக்கன. உள நலமும் கல்வி நலமும் இல்லாரை ஒன்றிப்பாடியும், பாட்டுடைத் தலைவராக்கியும் வாழ்நாளைக் கழித்த புலவர்கள் நிலையும், உதவா ஓட்டைச் செவிச் செல்வர் நிலையும், தமிழரசு வீழ்ச்சியின்பின் புலவர் நிலையும் அறிந்து கொள்ளற்கு இப்பாடல்கள் சான்றாக விளங்குதலால் முற்றாக முப்பாடல்களும் தரப்பட்டாவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/386&oldid=1474345" இலிருந்து மீள்விக்கப்பட்டது