பக்கம்:இலக்கண வரலாறு.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343


திருநகரி. திருக்குருகைப் பெருமாள் என்பது ஆழ்வார் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாரைக் குறிக்கும். இவர் நம்மாழ்வாரின் அரசவைக் கவிஞராக விளங்கியவர் என்றும், இவர் தந்தையார் பெயரும் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பதேயாகும் என்றும் கூறுவர்.

வரலாறு

வைணவ சமயத்தாராகிய இவர் வேளாண் குடியினர்; பாயிரம் சீரகத்தார் வணிகன் என்கிறது. இதனால் இவர்தம் மாலையும், செய்து வந்த தொழிலும் விளங்கும். மேலும் ஆழ்வார் திருநகரிக் கோயில் ‘சத்தாவரண விழா’வில் ‘திருப்பணிமாலை’ பாடுபவருக்கு ஏற்பட்ட உரிமைகளைத் தெரிவிக்கும் கோயிற் கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்னும் பெயர் உள்ளதையும், அவ்வுரிமையை ‘வத்தராயிருப்பு ஆழ்வாரப்ப பிள்ளை’ என்பவர் பெற்று வருவதையும் மாறனலங்கார வரலாறு தெரிவிக்கிறது. ஆதலால் இவர் தம் குடிவழி அறியப்படும். இவரூரும் திருக்குருகையே.


குரு


திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் குருவர் ‘சீநிவாசசீயர்’ என்பார். இவர், “சிற்குணச் சீநிவாதனின் அருளால், நற்பொருள் மூன்றையும் நலனுற உணர்வோன்” என்னும் மாறனலங்காரப் பாயிரமும், “சிற்குணத் திருமலை சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்” என்னும் மாறனகப் பொருட் பாயிரமும் பிறவும் கூறும்.

நூல்கள்


திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய நூல்கள் | மாறனலங்காரம், மாறனகப் பொருளும் அதன் எடுத்துக்காட்டாகிய நூற்றெட்டுத் திருப்பதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/388&oldid=1474346" இலிருந்து மீள்விக்கப்பட்டது