பக்கம்:இலக்கண வரலாறு.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345


தண்டியலங்காரத்திலும், மாறனலங்காரம் மிகவும் விரிவுடையது. நூற்பா அளவை அன்றி எடுத்துக்காட்டு அளவானும் விரிவுடையதே. இந்நூல் ஒரு நூன்மொழி பெயர்ப்பன்று. வழிவழி மரபையும், புதுவது வரவையும் இணைத்து இயற்றப்பட்டது. இது,

“முதுமொழித் தண்டி முதுநூல் அணியையும் புதுமொழிப் புலவர் புணர்ந்தியல் அணியையும் தனாதுநுண் னுணர்வால் தருபல அணியையும் மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் சதுர்பெற இரண்டிடந் தழீஇச் சார்பென”

விளங்குவது அறியப்படுகின்றது. இந்நூலில் வடமொழித் தண்டியாரை அரிதாகவும், தமிழ்த் தண்டியாரைப் பெரிதாகவும் சுட்டுகிறார்.

தண்டியலங்காரத்துட் கூறப்பட்ட பொருளணிகளின் தொகை 35. இவர் கூறும் தொகை 64.

அணி வகை

பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழி என்பவற்றை அணியுள் சேர்த்தார்.

வகைமுதல் அடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதின் இகழ்தல் என்பவற்றையும் அணியுள் இயைத்தார்.

ஜயம், தெரிதருதேற்றம் ஆகியவற்றையும் தனி அணி வகையுள் அமைத்தார்.

தண்டியாசிரியர் சித்திரக்கவிகள் பன்னிரண்டன் பெயரை ஒரு நூற்பாவில் அமைத்தார். இவர் முப்பத்திரண்டனைக் கூறுவதுடன் அவற்றுக்கு இலக்கணமும் சொல்கிறார். |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/390&oldid=1474348" இலிருந்து மீள்விக்கப்பட்டது