பக்கம்:இலக்கண வரலாறு.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348


ஆபோல் அவனிருக்கும் புலத்துச் சென்றும்... கொடுப்பதென்றவாறு”

திருக்குறள்

பாவிகம் என்னும் அணிக்கு 586 முதல் 623 வரையுள்ள திருக்குறள் பாடல்களை வரிசை தப்பாமல் தொடுத்து எடுத்துக் காட்டியுள்ளார். இஃதவர் திருக்குறள் பற்றினை விளக்கும்.

அரியார்

“அரியா ரரியார்

அரியா ரரியார்

அரியா ரரியார்

அரியா ரரியார்”

இஃதொரு சொல்லினான் மடக்கல். இதற்குப் பொருள் கூறுகிறார்:

அரியார் — யாவராலும் அளவிடற் கரியார்

அரி ஆர் — சத்துருக்கள் உயிரைப் பருகும்

அரியார் — சக்கராயுதத்தையுடையார்

அரியார் — பாம்பை மிக்க

அரியார் — சயனமாக உடையவர்

அரியார் — ஏனமாக அவதரித்தவர்

அரியார் — அவர் யாரெனில்

அரியார் — அரி என்னும் திருநாமத்தையுடையார் என்றவாறு.

துறை — கடவுள் வாழ்த்து. பா — குறளடி வஞ்சித் துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/393&oldid=1474351" இலிருந்து மீள்விக்கப்பட்டது