பக்கம்:இலக்கண வரலாறு.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. மாறனகப் பொருள்


மாறன் அலங்காரம், பாப்பாவினம் ஆகியவற்றை இயற்றிய திருக்குருகைப் பெருமாள் கவிராயரே இதனையும் இயற்றிய வராவர். இதுவும் காரி மாறப் பெருமான் ஆகிய நம்மாழ்வார் மேல் செய்யப்பட்ட நூலேயாகும். நூலாசிரியர் வரலாறு, காலம் ஆகியவற்றை மாறனலங்காரத்துக் கண்டு கொள்க,

நம்பியகப் பொருளுக்குத் தஞ்சை வாணன் கோவையும், இறையனார் களவியலுக்குப் பாண்டிக்கோவையும் களவியற் காரிகைக்குத் திருக்கோவையாரும் எடுத்துக் காட்டுகளாக விளங்குவதுபோல இம்மாறனகப் பொருளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருப்பதிக் கோவை என்பதாகும்.

காலம்

“அடைவாகும் எழுநூறோ டிருபத் தேழாம்
ஆண்டுமதி சித்திரையேழ் சித்ரை யோரை
உடையவரேழ் சந்நிதியில் உரிமை கேள்வி
யுறுசெம்மல் ஆஞ்சீநி வாதன் முன்பு
மடைதிறந்த வெள்ளமெனா மாண்போர் கொள்ள
மாறனகப் பொருளைவகுத் துரைத்தான் ஆய்ந்து
சடையனெனும் இயற்பெயரான் தமிழ்நா வீறன்
சார்குருகைப் பெருமாள்சீர் வணிகன் தானே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/395&oldid=1474353" இலிருந்து மீள்விக்கப்பட்டது