பக்கம்:இலக்கண வரலாறு.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352


இல்லை. கோவைத்துறை கூறிய மூன்றியல்களும் உள. இதன் காவல், எடுத்துக்காட்டாக அமைந்த திருப்பதிக் கோவையின் காவலே அல்லது கொடையே என்பது விளங்கும்.

திருப்பதி - அளவு

திருப்பதி என்பது ஓரிடப் பெயராய் இருப்பினும், திருமால் கோயில் கொண்ட இடங்களையெல்லாம் குறிக்கும் பொதுப் பெயராய் வருகின்றது. அத்தகிரி என்பது முதலாக வைகுந்த விண்ணகர் ஈறாக 93 திருப்பதிகள் கோவையில் இடம் பெற்றுள்ளன. அதனாலேயே அது திருப்பதிக் கோவைப் பெயர் பெற்றது. இதில் 455 துறைகள் உள்ளன. அவற்றுக்குரிய பாடல்கள் 527 எல்லாமும் கட்டளைக் கலித்துறைகளே. இதனை இயற்றியவரும் திருக்குருகைப் பெருமாள் கவிராயரே என்பர்.

பொருள்

“காட்சி ஐயம் தெளிதல் தேரல்”

எனக் கைக்கிளைத் துறை கூறப்படும். மாறனகப்பொருள்,

“காண்டல் சந்தயம் தெளிதல் கருத்துறலென்
றாண்டநால் வகைத்தே அழகுடைக் கைக்கிளை”

என்பதுடன், இவற்றைத் தனித்தனி நூற்பாவானும் விளக்குகின்றது. ஐயத்திற்குரிய நூற்பா:

“எய்திய இருவருள் சிறந்த இறைவன்மேற்
றையுறல் என்ப அறிவுடை யோரே”

என்பது.

“ஈன வரம்பரை யேயணு காஅரங் கேசற்கன்பாம்
வான வரம்பன் கொடியிட மோபொன்னி வாய்ந்தபுகழ்
தான வரம்பன் கொடியிட மோதமிழ் நாட்டுக்கொற்கை
மீன வரம்பொற் கொடியிட மோகொடி மேவிடமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/397&oldid=1474406" இலிருந்து மீள்விக்கப்பட்டது