பக்கம்:இலக்கண வரலாறு.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

இலக்கணச் செல்வம்

ச. மெய்யப்பன், எம். ஏ.,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

மணிவாசகர் பதிப்பகம் நல்ல நூல்களை நாட்டுக்கு வழங்கும் பதிப்பகம் என்பது வரலாறு ஆகிவருகிறது. துறைதோறும் சிறந்த நூல்களைப் பதிப்பித்துப் பலரின் பாராட்டையும் பரிசையும் குவித்து வெற்றிக் கொடி நாட்டி வீறுநடை போடுகிறது. அடிப்படை நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்த மொழிப்பணி ஆற்றி வருகிறது.

தமிழ்மொழி வரலாறு, நாட்டுப்புற இயல் வரலாறு, திருக்கோயில் வரலாறு, சிற்றிலக்கிய வரலாறு, தமிழகக் கலை வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு என வரலாற்று வரிசை வெளியிட்டு மொழிப்பதிவேடுகள் பல பதிப்பித்த பெருமை மணிவாசகர் பதிப்பகத்தின் தனிச் சிறப்பாகும்.

இலக்கிய வரலாற்றுடன் இலக்கண வரலாறும் வெளியிடும் பேறும் பெற்றுத் திகழ்கிறது. தமிழில் இலக்கியவரலாறுகள் பல உள:

கா. சுப்பிரமணியபிள்ளை
சீனிவாச பிள்ளை
பூரணலிங்கம் பிள்ளை
வையாபுரிப் பிள்ளை
தி. வை. சாதசிவ
பண்டாரத்தார்
ஈ. எஸ். வரதராச அய்யர்
ஔவை துரைசாமி பிள்ளை
மேயர் ராமசாமி நாயுடு
டாக்டர் மு. வ.
மு. அருணாசலம்
சோமசுந்தர தேசிகர்

எம். ஆர். அடைக்கலசாமி
சி. பாலசுப்பிரமணியம்
மது. ச. விமலானந்தம்
தமிழண்ணல்
ஸ்ரீசந்திரன்
மு. கோவிந்தசாமி
ஜேசுதாஸ்
சாமி முத்து
அருள்சாமி
பூவண்ணன்
சோம. இளவரசு
ரா. சீனிவாசன்





ஆகியோர் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/4&oldid=1508016" இலிருந்து மீள்விக்கப்பட்டது