பக்கம்:இலக்கண வரலாறு.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355


என்று ஏட்டுப் பிரதியில் காணப்படுவது கொண்டு, “பின்னும் வேண்டுவன கூட்டித் திருத்தி விரித்துச் செம்மை செய்து கொள்ளுமாறு முற்பட வரைந்த வரை வேயாய்ப் பின் அவ்வாறு செம்மை செய்யப்படாத நிலையில்” உள்ளதால் “தம் அந்திம தசையில் இந்நூலை இயற்றி இதனைச் செப்பஞ் செய்து முடிக்கு முன் காலகதி அடைந்து விட்டனரோ என்று சங்கித்தற்கும் இடனாகின்றது” என்பார் பதிப்பாசிரியர் கி. இராமாநுசையங்கார்.

எடுத்துக்காட்டு

வெண்பா, வெண்பா இனம்; ஆசிரியப்பா, ஆசிரியப்பா வினம்; கலிப்பா, கலிப்பாவினம், வஞ்சிப்பா, வஞ்சிப்பா இனம்: மருட்பா — ஆகியவற்றுக்கு 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் உள்ளன. பரிபாடல்கள் ஐந்தும் இதன் பிற் சேர்க்கையாய் அமைந்துள்ளன.

இலக்கியம் காட்டி இலக்கணம் கூறும் புதிய கல்வி முறைக்கு முன்னோடிபோல் அமைந்தது இப்பாப்பாவினம். இதன் இயலைப் பின்பற்றி, ஏறத்தாழ இதனை அடுத்த காலத்தே வெளிவந்ததே சிதம்பரச் செய்யுட்கோவையாகும்.

இதன் தெய்வ வணக்கம்:
“என்றும் திருமாற்கே யாளாவேன் எம்பெருமான்
என்றும் எனக்கே பிரானாவான் — என்றும்
பிறவாத பேராளன் பேரா யிரமும்
மறவாது வாழ்த்துக வாய்”

திருவள்ளுவனார் பாடிய குறட்பாவையும் யான் பாடியமையான் என் புன்னூலும் நூலாகிவிடும் என்னும் வகையில் இவர் அவையடக்கம் பாடுதல் நயமிக்கது.

எடுத்துக்காட்டுப் பாடலுக்குப் பின் இஃது இவ்வகைப்பா என்றும், இன்ன பகுதி இன்ன துறை இன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/400&oldid=1474408" இலிருந்து மீள்விக்கப்பட்டது