பக்கம்:இலக்கண வரலாறு.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357


“பதிகளின் அதிபதி திருமகள் பதியே
துதிகளின் அதிபதி தமிழ்மறைத் துதியே
மதிகளின் அதிபதி மாறனுண் மதியே
நதிகளின் அதிபதி வரசுர நதியே”

திணை — பாடாண். துறை — கடவுள் வாழ்த்து. அலங்காரம்— சாரம்.

நூலும் எடுத்துக்காட்டும் தந்தவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றும், இலக்கணமும் குறிப்பும் வரைந்தவர் காரி இரத்தினக் கவிராயரென்றும் கருதுவர்.

இவர்தம் மற்றை நூல்களுக்கு அரங்கேற்றக் காலம் குறிப்பிடப்பட்டுள்ளமைபோல் இதற்கு இல்லை.

பதிப்பு

பாப்பாவினம் 1932 இல் தமிழ்ச் சங்க வழியாக வெளிவந்தது. பதிப்பாசிரியர் கி. இராமாநுசையங்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/402&oldid=1474410" இலிருந்து மீள்விக்கப்பட்டது