பக்கம்:இலக்கண வரலாறு.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365

முழுதுற முயல்கிறார். திரமிளத்தில் இருந்து ‘தமிழ்’ வந்ததென்று துணிகிறார்.

சில குறிப்புகள்

வாக்கிய பதீயம், அரிபீடிகை, ஏலாராசீயம் முதலாயின வழங்குங் காலத்து அவ்வுரை நோக்கிச் சேனாவரையர் முதலாயினார் தொற்காப்பியத்திற்குரையெழுதினார் என்கிறார் (திங்ஙு. 11).

மியா, நுந்தை என்பன ஒரு செய்யுட்கும் பயன்படாது இக்காலத்து நின்றாற்போல அஇ, அஉ என்பனவும் (ஐ, ஔ என ஒலிப்பவை) இக்காலத்துப் பயன்படாமலே நின்றன எனினும் அமையும் என்கிறார்.

வடமொழியார் சையோகம் ஒரு மொழியிலும் இரு மொழியிலும் கொள்வர். அதனைக் கொள்ளாத நச்சினார்க்கினியரை “அக்கருத்தறியாத நச்சினார்க்கினியர்” என மறுக்கிறார் (5).

இத்தகையர், வடமொழி இலக்கணத்தைத் தமிழறிந்தார் கற்பதற்குத் தக்க வகையில் ஆங்கிலம் முதலிய பிறமொழி கற்பதற்கு நூல் செய்வார்போல நூல் செய்திருப்பின் இரு மொழித் தொண்டுமாகியிருக்கும். மொழி வெறுப்பும், மொழி எதிர்ப்பும் ஏற்படுதற்கு இடனாகியிராது. இதற்குரிய அடிப்படைக் குறையை இன்றும் மொழிவல்லார் எண்ணாராய்ப் பழவழியைப் பார்ப்பதாலேயே, மொழி எதிரீட்டை இருபாலும் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடுத்து வன்பகைக்கு ஏவுகின்றனராம். இலக்கணக் கொத்துடையார் இவர்க்குப் பின்னவர் எனினும், இச்செயலால் முன்னவரும் அவர் ஆகிவிடுதல் மேலேயறியலாம்.

பதிப்பு

பிரயோக விவேகம் ஆறுமுக நாவலரால் 1882இல் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுபதிப்பு 1884.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/410&oldid=1471486" இலிருந்து மீள்விக்கப்பட்டது