பக்கம்:இலக்கண வரலாறு.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

371


பழையன கழிதல் புதுவன புகுதல் வழுவல என்பது மெய்ம்மை. அதற்காகப் பழையனவாம் நூல்களைக் காலத்தோறும் திருத்தியும் மாற்றியும் சேர்த்தும் விலக்கியும் படைத்தலை நோக்காகக் கொண்டுவிட்டால் காலங்காட்டும் கண்ணாடியாம் நலின் தகவு இன்றாய் விடும் என்க.

ஒருக்கால், இலக்கண விளக்க ஆசிரியர் கற்பிக்கும் நோக்கில், பன்னூற் பொருளும் இந்நூற்றொகுப்பில் காணுமாறு செய்தற்குப் பேருதவியாக இருந்திருக்கும் எனலாம். பிற காரணம் ஏதேனும் இருக்குமாயினும் இலக்கண விளக்கச் குறாவளி கிளம்புதற்கு இதுவும் பெரியதோர் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

கடந்து போனவை பற்றிய இவ் வாய்வால் பயனென்னை எனின், எதிர்வரும் நூல் செய்வார்க்கு இத்தகும் ஆய்வால் பயனுண்டாம் என்பதே என்க.

நூற்பா அளவு எழுத்ததிகாரத்திலுள்ள மொத்த நூற்பாக்கள் 158 இல் இவர் நூற்பா 43. சொல்லதிகாரத்துள்ள மொத்த நூற்பாக்கள் 214 இல் இவர் நாற்பா 41. மற்றையவை தொல்காப்பியமும் நன்னூலும் சார்ந்தவை.

“பகாஅப் புதம்பகாஅப் பண்பிற் பயின்று
பெயர்வினை யிடையுரி எனநால் வகைத்தே”

(எழுத்.40)

“பகுபதம் பகுக்கும் பண்பிற் றாகி
வினையே வினைப்பெயர் எனவிரு பாற்றே”

(எழுத். 41)

இவை இவர்தம் நூற்பாக்களுள் இரண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/416&oldid=1474450" இலிருந்து மீள்விக்கப்பட்டது