பக்கம்:இலக்கண வரலாறு.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

“சிறப்பா யுள்ளன சிலதே டினனவை
மறப்பெனும் பகைவன் வாரிக் கொண்டனன்
அவன்கையில் அகப்படா தடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிய சிறார்தமக்
குரைத்தனன் அன்றியீ தொருநூல் அன்றே”

என்பதில் எத்தகு பணிவு (6)! இவரா கூறுகிறார்!


“தமிழ்நூற் களவிலை அவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ
அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்
றறையவே நாணுவர் அறிவுடை யோரே
ஆகையால் யானும் அதுவே அறிக
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக”

என்று ‘நாணின்றி’ இவர் கூறுவதை எண்ணுக. “முக்குண வசத்தால் முறைமறந் தறைவர்” என்பதை இப்படியா அடுத்த நூற்பாவிலேயே (7) மெய்ப்பிக்க வேண்டும். 99-ஆம் நூற்பா உரையிலும் இதனை மெய்ப்பிக்கிறார்.

உரையிலும் தான் என்ன?

“சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு (திருக் கோவையாரை) ஒன்றாக்குவர்” என்றும்,

“நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன்கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஓர் பொருளாக எண்ணி வாணாள் கழிப்பர், அவர், இவைகள் இருக்கவே (தொல்காப்பியம், திருக்குறள், இறையனாரகப் பொருள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/427&oldid=1474480" இலிருந்து மீள்விக்கப்பட்டது