பக்கம்:இலக்கண வரலாறு.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384


“முதனிலை இன்றியும் தொழிற்பெயர் மொழிகுவர்” என்னும் நூற்பாவும் பொருளும் மேலாய்விற் குரியவை(70).


தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் விகாரங்களுடன் நிலைமாறுதல் என்பதைக் கூட்டி ‘தசை, சதை’ முதலிய எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் (113).


கணக்கு எழுதுதலால் கணக்கன் என்னும் வழக்கை, ‘கணக்கான் முயன்று உண்பவன் கணக்கன்’ என்கிறார் (117).


“ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே”

முதலியன பொய்யுரை என்றகிறார் (108).


பண்புத் தொகைவிரி என்னும் நூற்பாவில் (98) இவர் ‘வெள்ளை’ என்னும் பண்பு பற்றி உரைப்பதைக் காட்டி இவர்தம் பட்டறிவுச் சிறப்பை அறிவதுடன் அமைவாம்:


“வெண் கரும்பென இனம் பற்றியும், வெண் திங்கள் என இனம் பற்றாமலும், வெண்டாமரை எனத் தனக்குரிய சினையை விட்டு உரிமை இல்லாத முதலைப் பற்றியும், வெள்ளாடென வெதிர்வு பற்றியும், விலங்கன்னர் வெள்ளறிவினார் என இழிவு பற்றியும், வெண்களமர் வெள்ளாளர் எனச் சாதி பற்றியும், வெள்ளோட்டம் எனப் புதுமை பற்றியும், வெண்டேர் எனப் பொய் பற்றியும், வெளிற்று மரமென உள்ளீடின்மை பற்றியும், வெளியார் முன்னென இயல்பு பற்றியும், இச்சோறு வெண்படியெனக் கலப்பின்மை பற்றியும், இவ்வுரு வெண்கலமென ஒரு பெயரே பற்றியும், வெள்ளிடை எனத் தனிமை பற்றியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/429&oldid=1474484" இலிருந்து மீள்விக்கப்பட்டது