பக்கம்:இலக்கண வரலாறு.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. தொன்னூல் விளக்கம்


சில பெயர்களின் சிறப்பு சில பெயர்களைத் தூண்டித்துலக்குகின்றன. நன்னூல் என்பது அத்தகைய தொன்று. ‘நூல்’ என்பதே இலக்கணப் பொருட்டதாகவும் நன்னூல் எனப் பெயர் கொண்ட அது, அதற்கு முன் வந்த நேமிநாதத்தைச் ‘சின்னூல்’ என்று வழங்கத் தூண்டிற்று. பின்னூலாக வந்த வீரமாமுனிவரின் இலக்கண நூலைத் தொன்னூல் என்று பெயரிடத் தூண்டிற்று.

நூலாசிரியர்

நூலாசிரியரே உரையும் செய்தாராகலின் ‘தொன்னுல் விளக்கம்’ என்றே பெயரிட்டார். இன்றேல் ‘யாப்பருங்கலம்’ வேறாகவும், விருத்தி வேறாகவும் இரண்டும் இணைந்து யாப்பருங்கல விருத்தி என்றானாற் போல ஆகும். ‘அகப்பொருள் விளக்கம்’ என்னும் பெயரும் எண்ணத் தக்கது.

“மூத்தோர் புதைத்த அரும் பயனாகிய பொருளைக் கண்டு அறிந்து எடுப்பதற்கு இலக்கண நூலே விளக்காம். விளக்குதலால் விளக்கெனப்பட்டது” என்பது ஆசிரியர் உரை (1). அந்நூற்பா:

“சொன்னூல் உடையாத் தொகைக்குணத் தோன்றா
முன்னூல் தந்த முதல்வனைப் போற்றி
நன்னூல் ஆய்ந்தோர் நவின்ற ஐம்பொருள்
தொன்னூல் விளக்கமுன் சொற்றுதும் எழுத்தே”

வரலாறு

தொன்னூல் விளக்கு ஏற்றியவர் வீரமாமுனிவர். 1680ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் இத்தாலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/431&oldid=1474487" இலிருந்து மீள்விக்கப்பட்டது