பக்கம்:இலக்கண வரலாறு.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

387


நாட்டுக் காத்தி கிளியோன் என்னும் ஊரில் பிறந்தார். கான்சுடென்டைன் சோசப்பு பெசுகி என்னும் பெயர் கொண்டார். தம் பதினெட்டாம் அகவையில் 21-10-1698இல் துறவு மேற்கொண்டு கிறித்தவ அவையில் சேர்ந்தார்.

1700 — 1701 இல் இரவீனா நகரில் இலக்கண ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1701—1703: மெய்ப்பொருள் பயின்றார். 1703 — 1706: ஆசிரியப் பணியாற்றினார். 1706 — 1710: திருமறை பயின்றார். 1709: குருக்கள் ஆனார். 1710 — 1711: இத்தாலியில் இருந்து இந்தியா வந்தார்.

அம்பலக்காடு, மதுரை காமயநாயக்கன்பட்டி, குருக்கள் பட்டி, இராமநாதபுரம், ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம், ஆவூர், திருச்சி, மணப்பாடு ஆகிய இடங்களில் திருப்பணி செய்தார்.

ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், முதலான மொழிகளைச் கற்ற இவர் தமிழ், வடமொழி, இந்துத்தானி, தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளையும் கற்றார். தமிழ்த் துறவியரென — பெருமடத் தலைவரென — உடையும் அணியும் மேற் கொண்டார். தைரியநாதர் எனவும், வீரமாமுனிவர் எனவும் பெயர் கொண்டார். சதுரகராதி முதலிய சில அகராதிகள் தொகுத்தார். தேம்பாவணியாம் காவியமும் (1726) சிற்றிலக்கியங்களும் படைத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் (1728), செந்தமிழ் இலக்கணம் (1730), தொன்னூல் விளக்கம் (1730) முதலியவை இயற்றினார். இவர் மறைந்தது 1747. அகவை 67.

ஒரு நோக்கு

இதுகாறும் இவ்லிலக்கண வரலாற்றில் இப்படித் திட்டவட்டமான ஆண்டு, திங்கள், நாள் செய்திகள் எவருக்கேனும் குறிக்க வாய்த்தது உண்டா? ஆண்டேனும் திட்டப்படுத்த இயலவில்லையே! இந்த நூற்றாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/432&oldid=1474488" இலிருந்து மீள்விக்கப்பட்டது