பக்கம்:இலக்கண வரலாறு.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

33. பிரபந்த தீபம்



இலக்கிய வகைகளை விளக்கிக் கூறும் நூல்களுள் ஒன்று இத்தீபம். ‘விளக்கம்’ என வழங்கும் தமிழ்ப் பெயருடைய இலக்கண நூல்கள் சில. இது ‘தீபம்’ என்னும் வட சொல்லால் வழங்கும் பெயர். இந்நூலின் ஆசிரியரைப் பற்றிய செய்தி தெரிந்திலது. பெயரும் அறிய முடியாமையால் பிறவற்றை அறிதற்கு வாய்ப்பு இல்லை. சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம், கடவுள் வாழ்த்து, நூல் நுவல்வு இன்னவை பற்றியும் எதுவும் இல்லை. நூலைப் பார்த்த அளவான் ஏடுகள் சிதறுண்டு எண்வரிசை பற்றிக் கவலைப் படாமல் தொகுத்து வைக்கப்பட்டது என்பது புலப்படுகின்றது. இதன் நடை நூற்பா நடை.

நூன்முறை

அகப்பொருட்கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அநுராக மாலை, அரசன் விருத்தம், அலங்கார பஞ்சகம், ஆற்றுப்படை, இரட்டை மணிமாலை, இணைமணி மாலை, இருபா இருபது, இயன்மொழி வாழ்த்து, உற்பவ மாலை, உழிஞைமாலை, உலாமடல், உலா, ஊரின்னிசை, ஊர்வெண்பா, ஊர்நேரிசை, ஊசல், எழுகூற்றிருக்கை, எண்செய்யுள், ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக்கோவை, நவமணிமாலை இவ்வாறு தொடர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/437&oldid=1474534" இலிருந்து மீள்விக்கப்பட்டது