பக்கம்:இலக்கண வரலாறு.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

399

விட்டிருக்கக் கூடும். ஏனெனில் வெண்பாவில் புகழேந்தியாகத் திகழ்ந்து நளவெண்பாப் பாடிய ஒருவரையன்றி வேறு புகழேந்தியார் பெயர் வரலாற்றில் இடம் பெற்றிலது. ஆதலால் அவர் பெயரால் ஒருவர் இயற்றியிருத்தல் கூடுவதே. கடந்த நூற்றாண்டைச் சேர்த்த நூலாகலாம்.

தூது

இந்நூலாசிரியர் “தூதுரைத்து வாங்கும் தொடை” எனப் பத்தினைக் குறிக்கிறார்.

“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம் பெறுமே கம்பூவை பாங்கி—நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம்ஈ ரைந்துமே
தூதுரைத்து வாங்கும் தொடை”
(7)

என்பது அது. கண்ணிக்கு இணை:

“வேல்வாள் கணைவண்டு வேலை விடமமுதம்
சேல்பங் கயம்குடங்கை செங்காவி—காலன்
வடுமான் கருவிளையை வண்சகோ ரத்தை
அடுமாங் குழையை அடர்ந்து”
(14)

உவமான சங்கிரகம் பார்க்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/444&oldid=1474711" இலிருந்து மீள்விக்கப்பட்டது