பக்கம்:இலக்கண வரலாறு.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

திருக்கோவையார் எடுத்துக் காட்டவும் படுகின்றது. (எ-டு) குறியிடக் கூறல் என்பது, உட்கொண்டு வினாவிய தலைமகனுக்கு யாங்கள் சந்தனச் சாந்தணிந்து சுனைக்காவிகள் சூடித் தோகைகள் துயிலும் வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம்; அவ்விடத்து நின்வரவறிய மயில் எழுப்புவாயாக எனத் தோழி குறியிடங் கூறல்.

“பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம் விண்ணோர்
புனைவளர் சாரற் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின் றாடும் செழும் பொழிலே”
(திருக். 154).

திருக்கோவையார்க்குப் பொழிப்புரை வரைந்தாற் போல் தொடர்ந்து இவர் வரைந்து செல்கிறார்.

நெல்லைப்பதியினர் நூலியற்ற வேண்டிக் கொண்டமையால், நூலாசிரியர், நூலியற்றத் தூண்டியவர், உரை கண்டவர் ஆகிய மூவரும் நட்புரிமை யுடையவராகத் நிகழ்ந்திருக்கக் கூடும்.

பதிப்பு

இதன் முதற்பதிப்பு 1889இல் பழனியாண்டி என்பவரால் வெளியிடப்பட்டது. கு. சுந்தரமூர்த்தி அவர்கள் ஆய்வுரையுடன் கழக வழியாக 1972இல் மீண்டும் வெளியிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/455&oldid=1474733" இலிருந்து மீள்விக்கப்பட்டது