பக்கம்:இலக்கண வரலாறு.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

இயற்றப்பட்டது’ எனச் சிறப்புப் பாயிரப் பாடல்களாலும், உரையாலும் அறிய முடிகின்றது. அகத்திய முனிவரின் சிவவியாகரணம் பற்றி இந்நூல் கூறுவதே கூற்றுப் போலும்!

நூல்

இக்குவலயானந்தம் கடவுள் வணக்கமாக மூத்த பிள்ளையார், சிவபெருமான் வாழ்த்துகளை முதற்கண் கொண்டுளது. சிறப்புப் பாயிரமாக அகவல் 1, பதினான்கு சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம் 1, எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1 ஆக மூன்று பாடல்களைக் கொண்டுளது. நூல் உறுப்பியல், அணியியல், சித்திர இயல் என மூவியல்களைக் கொண்டுளது. நூற்பாவால் அமைந்த இந்நூலில் முறையே 150, 120, 29 என 299 நூற் பாக்கள் உள்ளன.

உறுப்பியல் முதல் நூற்பா, உயர்திணை அஃறிணை முதலாக உயர்ச்சி, தாழ்ச்சி, சமம் ஈறாகிய உறுப்புகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அம்முறையே அவற்றின் இலக்கணத்தை விரித்துக் கூறுகின்றது.

அணியியலில் அத்தகு தொகை நூற்பா அணியியலுக்கு இல்லை. சித்திர இயலுக்கு உள்ளது. ஆதலால் அணியியல் தொகுப்பு நூற்பா விடுபாடாகியிருக்கக் கூடுமெனத் தோன்றுகின்றது.

“ ஊருதல் பறப்புதல் நடப்புதல் எனவே
மூவகை யாகும் உயிர்ப்பொருள் இனமே”

என்கிறார் (உறுப். 8). நீர்வாழியை ஊருதலுடன் இயைத்துக் கொள்ள நேர்கின்றது. வேற்றுமை ஏழெனக் கொள்கின்றது (உறுப். 33).

“அவன் இவன் என்ப தாகும் ஒருமொழி”
“அவர் இவர் என்ப தாகும் பெருமொழி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/463&oldid=1474743" இலிருந்து மீள்விக்கப்பட்டது