பக்கம்:இலக்கண வரலாறு.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. அறுவகை இலக்கணம்

மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக வளர்ந்த செய்தி அறிந்ததே. இவண், ஆறாம் இலக்கணமெனப் புலமை இலக்கணம் ஒன்றனையும் சேர்த்து அறுவகையிலக்கண நூல் எழுந்தமை காணலாம்.

ஆசிரியர்

இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார். இவர்தம் பிள்ளைப் பெயர், சங்கரலிங்கம் என்பது. நெல்லையைச் சேர்ந்த இவர் வண்ணச் சரபமென (இசைபாடும் எண் கால் புள்ளென)த் தமிழுலாக் கொண்டார். வள்ளலாரொடும் தொடர்பு கொண்டிருந்தார். விழுப்புரத்தை யடுத்த திருவாமாத்தூரில் ஒடுக்கங் கொண்டார். இவர்தம் வழிமுறையர் அனைவரும் இவர் ஏட்டுச்சுவடியைக் காக்குமளவில் நில்லாமல் பாட்டுத் திறத்திலும் ஓங்கி வந்திருத்தல் உவகைக்குரிய செய்தியாம். இவர்தம் பெயரரும் கொள்ளுப் பெயரரும் வாழும் புலவர்கள். முன்னவர் முருகதாச ஐயா; பின்னவர் தி. மு. சங்கரலிங்சும்.

அடிகளார் காலம் நூற்றாண்டாகச் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை. வீரமாமுனிவர் வரலாற்றைக் கூறித் தமிழ்ப் புலவர் வரலாற்றுக்கென வருந்திய வருந்தம் இல்லாவாறு செய்யும் ஒரு வரலாறுடையார் தண்டபாணி அடிகளார். அவர் காலம் 22-11-1839—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/468&oldid=1474749" இலிருந்து மீள்விக்கப்பட்டது