பக்கம்:இலக்கண வரலாறு.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424


5-7-1898. பட்டினத்தாரெனக் குறியிறைக் கோலவுடையராகத் திகழ்ந்தவர் அடிகளார். இவர் பொழிவதெல்லாம் பரமே! முத்துக் கோத்தாலென எழுத்துகள்! இலக்கம் பாடல்கள் இருக்கும் போலும் கிடைத்தவை மட்டும். வண்ணம் பாடுதலுக்கென மீள வந்த அண்ணல் அருணகிரி வண்ணச்சரபம்! இலக்கிய வகைகளை எண்ணிக் கொள்க என வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தருக்குப் பின்னே புத்திலக்கிய வகைகளைப் பெருக்க வந்த புகழ் ஞானசம்பந்தர்!

இவர் பாடிய புராணத்தில் ஒரு பகுதி கண்கண்ட புலவர் சருக்கம். அதில் இடம் பெறுபவர் வள்ளலார், பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார், கவி குஞ்சர பாரதி, மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலியோர் எனின் இவர் காலச்சூழல் எத்தகையது?

நூல்

அறுவகை இலக்கண முதற்பகுதி காப்பும், பாயிரமுமாம். 12 பாடல்களையுடையது. இறுதியில் ஒரு கலித்துறைப்பா.

எழுத்திலக்கணம் (165), சொல்லிலக்கணம் (112), பொருளிலக்கணம் (122), யாப்பிலக்கணம் (134), அணியிலக்கணம் (109), புலமை இலக்கணம் (144), ஆகியவை 786 நூற்பாக்கள். ஆக நூன் முழுமையும் 799 பாடல்களாம். “நவ நூலொன்று எழுநூற்றெண்பத்தாறு சூத்திரத்தால் நவின்றிட் டேனே” என்கிறார் ஆசிரியர் (சி.பாயீ).


“ஐந்தே இலக்கணமென் றாயிரம்பேர் கூறிடினும்
செந்தேனென் றாறுவிதம் செப்புவிப்ப— தெந்தேகத்
துள்ளும் புறம்பும் ஒளிரும் ஒருபொருட்சீர்
விள்ளும் குருபாத மே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/469&oldid=1474750" இலிருந்து மீள்விக்கப்பட்டது