பக்கம்:இலக்கண வரலாறு.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

43. விருத்தப்பாவியல்



வீரப்ப முதலியார் என்பவரால் இயற்றப்பட்ட நூல் இது. இவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்குரைஞராக விளங்கியவர். 1938 இல் வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழ் விருத்தத்தின் வளர்ச்சியை மிக விரிவாக ஆய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் (11-32).

நூல்

“கன்ன லின்சுவை வேம்பங் கனியினால்
தந்ந லங்கள் சிறந்துத யங்கல் போல்
என்னின் நாவலர் ஏற்றம் விளங்குமால்”

என்பது போல அவையடக்கம் 7 பாடல்கள் பாடுகின்றார். விருத்தப்பாவியல் 12 படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

அறுசீர்க் கழிநெடில் வகையை முதற் படலத்தில் அவ்வவ் விருத்தப் பாவால் விளக்குகிறார். இவர் இலக்கணம் அமைக்குமாறு:

“சீர்வளர் கமலச் செல்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
கார்வள மலிந்த கூந்தல் கன்னலும் கசக்கும் இன்சொல்
ஏரிளங் கொங்கை மின்னேர் இடையெழிற் கொடியம் பேதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/475&oldid=1466747" இலிருந்து மீள்விக்கப்பட்டது