பக்கம்:இலக்கண வரலாறு.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

431

சீர்விள மாச்சீர் தேமாச் சீரினைத் திரட்டு மீங்கே” என்று பாடலைக் கூறி இலக்கணம் உரைநடையில் கூறுகிறார். அதனை வேண்டுமளவால் விளக்கி எடுத்துக் காட்டுத் தருகிறார்.

ஒவ்வொரு வகைப் பாவிலும் எத்தனை எத்தனை, எவ்வெவ் வகை யாப்பால் வரும் என்பதை விளக்கிச் செல்கிறார்.

இவர் கூறும் விருத்த வகைகள்: அறுசீர்க்கழிநெடில், கலித்துறை, எழுசீர்க்கழிநெடில், எண்சீர்க்கழிநெடில், கலிவிருத்தம், சந்தவுறுப்பு, சந்தவிருத்தம், சந்தக்கவித் துறை, அறுசீர்ச்சந்தவிருத்தம், எழுசீர்ச்சந்தவிருத்தம், எண்சீர்ச்சந்தவிருத்தம் என்பன. இறுதியில் ஒழிபியலும் கூறுகின்றார்.

காஞ்சிப்புராணமும், கந்தபுராணமும், பாரதம், இராமாயணம், தேவாரம் ஆகியவை மேற்கோளில் பெரிதும் இடம் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/476&oldid=1474771" இலிருந்து மீள்விக்கப்பட்டது