பக்கம்:இலக்கண வரலாறு.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

435


விருந்தமும் சில உள. வணக்கமும் அவையடக்கமும் நீங்கலாக 362 பாடல்கள் உள்ளன.

முதற்பாட்டு :

“கற்பவை கசடறக் கற்பதற்குப்—பயன்
படுவதே இலக்கணம் அஃதெழுத்து
சொற்பொருள் யாப்பணி எனக்கிளியே—ஐந்து
வகைப்படும் நமது தமிழகத்து"

கடைசிப் பாட்டு :

நல்லமுனிவர் பவணந்தியார்—தந்த
நன்னூலி லுள்ள இலக்கணத்தை
எல்லோரும் நன்கு தெரிந்துகொள்ள—இந்த
இலக்கணக் கும்மி வழியாமே!

இப்பாடல்களுக்கு ஆசிரியர் பொழிப்புரை எடுத்துக் காட்டு ஆகியவற்றையும் தந்துள்ளார்.

கால வளர்ச்சிக்கு ஏற்பப் புதுவன புகுதல் சிலவேனும் நேர்ந்திருப்பின் எளிமைப்படுத்தியதுடன் தொண்டாகவும் விளங்கியிருக்கும், இதனை முகவுரையில் சுட்டினாரும் உளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/480&oldid=1474836" இலிருந்து மீள்விக்கப்பட்டது