பக்கம்:இலக்கண வரலாறு.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



50. உரைநடையிலமைந்த சில
இலக்கண நூல்கள்


கால்டுவெல் ஒப்பிலக்கணம் (1814-1891)

தமிழ்மொழி தனிமொழி என்னும் உண்மையை முதற்கண் நிலைநாட்டியவர் இவர். பன்மொழிப் புலமை வாய்த்த இவர் ஒப்பிலக்கண நூலைச் செய்து தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டினார். வடமொழியின் தொடர்பு நீங்க நீங்கத் தமிழ் நயமிகுதலை எடுத்துக் காட்டினார். தமிழின் பண்டை நிலையை அடைதற்குக் கால்கோள் செய்தவருள் தலைவர் இவரே. இவரைப் பின்பற்றியே பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோர் பாடுபட்டுத் தனித் தமிழ் இயக்கமாக்கி வளர்க்கலாயினர்.

1856இல் கால்டுவெல் ஒப்பிலக்கண முதற்பதிப்பு (ஆங்கிலம்) வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 1875இல் வெளிவந்தது. அவ்விலக்கணம் கழகத்தின் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது (1941).

விசாகப் பெருமாளையர் அணியிலக்கணம் (19ஆம் நூற்றாண்டு நடுப்பகுதி)

உரை நடையில் இலக்கணமும் பாடல் எடுத்துக்காட்டுமாக அமைந்த நூல் இது. பொருளணிகள் 100 காட்டுகின்றது. சொல்லணி, பொருளணிபோல் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/491&oldid=1475095" இலிருந்து மீள்விக்கப்பட்டது