பக்கம்:இலக்கண வரலாறு.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

பின்னர் 1939இல் ஆசிரியர் மைந்தரால் பதிப்பிக்கப்பட்டது.

“கோமூத் திரியே கூட சதுர்த்தம்”

என்னும் நூற்பாவுக்கு உரிய சித்திர கவிகளையும் வேறு பலவற்றையும் சேர்த்து (23 வகை) வெளியிடப்பட்ட நூல்.

பஞ்ச லட்சணம்

ஐந்திலக்கணங்களையும் உரைநடையில் கூறும் இந்நூல் ஒரு நூலுக்கு உரை என்னும் போக்கில் இல்லாமல் எடுத்துக் கூறும் இலக்கணத்துக்கு ஏற்ற நூற்பாக்களையும், உரைவிளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் கொண்டுளது. (இவ்வகையிலும், சுருக்க வகையிலும், வினா விடை வகையிலும் வெளிவந்த நூல்கள் பல. அவற்றை விரிவஞ்சி விடுத்தாம்.)

1903இல் இது சுருக்க நூலாகவும் 1918இல் பெருக்க நூலாகவும் வெளிவந்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/493&oldid=1440137" இலிருந்து மீள்விக்கப்பட்டது