பக்கம்:இலக்கண வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


“வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்..... நாடி”

என்றிருந்தும் இலக்கியப் படைப்பாளிகள் அவற்றைப் போற்றிக் கொள்ளாமையால், இலக்கணம் தன் வளர் நிலை காட்டலில் தேக்கமுற்றது. இலக்கணத்தின் முழுக் கட்டுக்கும் ஆட்பட்ட இலக்கியப் படைப்புகள் கட்டளையில் அறுக்கப்பட்ட செங்கலென ஒன்றுபோல் அமைந்து பொலிவு காட்டாவாயின. இலக்கணத்தின் ஊற்றுக் கண்ணாம் இலக்கியத்தின் இவ்வறட்சி, இலக்கணத்தைத் தாக்கி முடக்காமல் விடுமா?

தமிழ் இலக்கண நூல்களெனப் பெயர் அறியப் பெறுவனவற்றுள் ஒரு பாதி தானும் நமக்குக் கிடைத்தில. கிடைத்த அவ்வளவும் குறைந்தது என்பதற்கு இல்லை; விரிவானவையே. அவற்றைப் பற்றிய வரலாற்றுப் பார்வையில் எழுதப்படுவது இவ்விலக்கண வரலாறாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/54&oldid=1468549" இலிருந்து மீள்விக்கப்பட்டது