பக்கம்:இலக்கண வரலாறு.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

என்றவாறு. நல்லாசிரியர்-அகத்தியனார் முதலாயினோர். உலகம் என்பது ஆசிரியரை” என உரையும் விளக்கமும் வரைந்தார். இதனால் தொல்காப்பியர்க்கு முன்னே இருந்தவர் அகத்தியனார் என்னும் எண்ணம் அவர்க்கு இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆயின் ‘முந்துநூல்’ ‘அகத்தியம்’ எனக் குறித்தாரல்லர் என்பது நினைவுறத் தக்கது.

முந்து நூல் என்பதற்கு, ‘முன்னை இலக்கணங்கள்’ என உரை வரையும் நச்சினார்க்கினியர்’, உரை விளக்கத்தில், “முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூத புராணமும் இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலும் சோதிடமும் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம்” என்கிறார்.

மூல நூல் ஆசிரியரோ, பாயிரம் பாடியவரோ, முதல் உரையாசிரியரோ குறிப்பாகக் கூடச் சுட்டாதவற்றை நச்சினார்க்கினியர் சுட்டுதல் வியப்பும் திகைப்பும் தருவனவாம். அவ்வியப்பு திகைப்புகளை தான் ஏற்றுக் கொண்டு நடையிடுகின்றது இறையனார் களவியல் உரை. ஏனெனில் நச்சினார்க்கினியர் உரைக்கு முற்பட்ட உரை இறையனார் களவியலுரை.

முச்சங்க வரலாற்றை வரையும் அவ்வுரை, தலைச் சங்கத்தார்க்கு “நூல் அகத்தியம் என்ப” என்றும் இடைச் சங்கத்தார்க்கு “நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமும் என இவை” என்றும், கடைச் சங்கத்தார்க்கு “நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப” என்றும் கூறுகின்றது.

“இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர் கருங்கோழி மோசியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/56&oldid=1474548" இலிருந்து மீள்விக்கப்பட்டது