பக்கம்:இலக்கண வரலாறு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

தகு புலவர், நுணங்கு மொழிப்புலவர் என அடை பல தந்து நடைப்படுத்துகிறார்.

யாத்தனர் புலவர், சொல்லினர் புலவர், எண்ணினர், கூறுப, நேர்ந்தனர், நேரார், வகுத்தனர், நுவன்றுரைத்தனர் என்றும் ஆள்கிறார்.

‘ஆசிரியர்க்க’ என்று ஆணை சுட்டுகிறார், ‘புலவராறே’ என வழிமை காட்டுகிறார். ‘முடிய வந்த அவ்வழக்கு’ என நிலைப்படுத்துகிறார். ‘கிளப்ப’ என்று உடன் பாட்டிலும் 'கிளவார்' என்று எதிர் மறையிலும் தெளிவாக்குகிறார்,

இவற்றையும் எண்ணின் முந்துநூற் குறிப்பு மேலும் நூறாகி ஏறத்தாழ நானூறாகின்றது.

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொல்காப்பியர் நூல் இயற்றிய செய்தியைப் பனம்பாரனார் பாயிரத்தில் குறிக்கிறார். அக்குறிப்பு தொல்காப்பியத்தில் வரும் பலப்பல சான்றுகளையும் கண்டு அவற்றின் பிழிவாகக் கூறிய செய்தியாம்.

‘செய்யுளுள்ளே’, ‘செய்யுளுள் உரித்தே’, ‘செய்யுளுள் கிளக்கும்’, ‘செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும்’ எனச் செய்யுளியல் ஒழிந்த இயல்களிலும் பரவலாகக் கூறும் தொல்காப்பியர் கூற்றே செய்யுள் வழக்கை நாடி அவர் நூல் செய்ததை விளக்கும்.

‘ஒல்வழி அறிதல் வழக்கத்தான’, ‘வழக்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுகல்’, ‘மயங்கல் கூடா வழக்கு வழிப்பட்டன’, ‘நெறிப்பட வழங்கிய வழி மருங்கென்ப’, ‘வழக்கியல் மரபே’, ‘வழக்கொடு சிவணிய வகைமையான’, ‘வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப’, ‘வழக்கென மொழிப’ எனப் பல இடங்களில் வழங்கு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/58&oldid=1479437" இலிருந்து மீள்விக்கப்பட்டது