பக்கம்:இலக்கண வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


னார் எனின், அவர் நூல் வழியே தம் நூலைச் செய்திருந்தார் எனின் அதனைச் சுட்டாமல் இருப்பரோ? 'இருப்பர்' எனின் அவர்மேல் — தொல்காப்பியர்மேல் — அடாப்பழி சுமத்துதலாகவே அமையும் என்பது ஒரு தலை. அவ்வாறு சுட்டத் துணியாமலும் அகத்தியர்க்கு மாணவர் தொல்காப்பியர் என நிலை நாட்டல் வேண்டியும் ஒரு புனைவு செய்தார் நச்சினார்க்கினியர். அல்லது, அவர் காலத்துக்கேட்ட புனைவை அமைத்தார். அதனை அகத்தியர் பகுதியில் காண்போம்.

அகரத்தை முதலாகவும் னகரப் புள்ளியை இறுதியாகவும் கொண்ட நெடுங்கணக்கு முறை தொல்காப்பியர்க்கு முன்னரே அமைந்தவை. குறில், நெடில், அளபெடை, மாத்திரை, உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் குறியீடுகளும் அவற்றின் பகுப்புகளும் அவர்க்கு முன்னரே இருந்தவை.

தனி எழுத்தாயினும் சொல்லுறுப்பாம் எழுத்தாயினும் அதன் இயல்பு திரியாமை, 'தபு' என்பது தன்வினை பிறவினை ஆகிய இரண்டன் நிலையிலும் வருதல், மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈற்றுச் சொற்களாகத் திரிந்து வருதல் ஆகியனவும் தொல்காப்பியர்க்கு முந்தை நூல்கள் தந்தனவே.

எழுத்தொலிகள் பிறக்கும் முறை, மெய்யும் குற்றியலுகரமும் புள்ளி பெறுதல், புணர்ச்சித் திரிபுகள், பெயர்களின் முறை, தொகை, சாரியை, சாரியை கெடுதலும் திரிதலும், உடம்படுமெய் என்பவையும் தொல்காப்பியர்க்கு முன்னவர் கொடையே.

யாத்தவும் ஞாத்தவும் வினையில் ஒப்பாதல், உயர்திணைப் பெயர் இயல்பாதல், வேற்றுமைகளின் திரிபுகள்,! அனவுப் பெயர் நிறைப் பெயர் ஆகியவற்றின் முதலெழுத்துகள் அழன் புழன் ஏழு என்பவற்றின் சாரியை, சாரியை பெறாது முடியும் சொற்கள், உரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/61&oldid=1471356" இலிருந்து மீள்விக்கப்பட்டது