பக்கம்:இலக்கண வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

யர்க்குணர்த்திய" என்பதே அகத்தியர்க்கு முன்னரே தமிழ் நூல் உண்மையை உணர்த்தும் எனத் தெளிவிப்பார் கா. சு. (தமிழ் இலக்கிய வரலாறு. பக். 41).

அகத்தியர் பெயரால் வழங்கப்படும் நூல்களாக இலக்கிய அகராதி வழியே, அறியப்படுவனவற்றின் எண்ணிக்கை 123. 'அகத்தியர்—அம்மை சாத்திரம்' என்பது தொடங்கி 'அகத்தியர் வைத்தியம்—150' என்பது ஈறாக உள்ளன. அவை, 'வைத்தியம்', 'யோகம்', 'நாடி', 'சாலம்', 'ஞானம்', 'தீட்சை ', 'மந்திரம்', "சோதிடம்', 'இரசம்' முதலிய வகைகளைச் சார்ந்தவை. 'புனைசுருட்டு—18' என்று கூட அவர் பெயரால் ஒரு நூலுண்மை அறியப்படுகின்றது. ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ என்னும் நூலுண்மை நாடறிந்தது.

இவற்றை நோக்க இரண்டு குறிப்புகள் தோன்றுகின்றன. ஒன்று, அகத்தியர் என்னும் பெயருடையார் பலர் இருந்துள்ளனர் என்பது. மற்றொன்று, பலப்பலர் தாம் இயற்றிய பலப்பல நூல்களை அகத்தியர் தலையில் கட்டி உலவ விட்டுள்ளனர் என்பது.

கந்தியார் என்பாரும் வெள்ளியார் என்பாரும் பலப்பல பாடல்களை இயற்றி, இடைச் செருகலாக்கியது போல், வேறுசிலர், நூல்களை இயற்றி அகத்தியர் பெயரிலேயே உலவ விட்டு உவகையுற்றனர் என்க.

பெரும்பாலும் மருத்துவம் பற்றிய அகத்தியர் நூல்களைக் குறித்த மதிப்பீடு ஒன்றைச் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி தருகின்றது: “இப்பொழுது இவர் (அகத்தியர்) பெயரால் வழங்கும் நூல்கள் போலி நூல்களே”' என்பது அது.

வடமொழி, 'தெய்வ மொழி' என்னும் கருத்தைப் பெருவரவாக வடமொழியாளர் பரப்பிவந்தனர். அதனைக் கேட்ட தமிழர், தம்மொழியும் 'தெய்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/68&oldid=1471363" இலிருந்து மீள்விக்கப்பட்டது