பக்கம்:இலக்கண வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

“வயவலி யாகும்”
“வாள்ஒளி யாகும்”
“உயாவே உயங்கல்”
“உசாவே சூழ்ச்சி”

இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

அடைமொழி நடை

மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று.

“இழுமென் மொழியால் விழுமியது பயிலல்”
“எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்”

இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்து கொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று.

“மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே”

“ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்”

என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி, ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கு மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம்.

வரம்பு :

இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆறும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/96&oldid=1471412" இலிருந்து மீள்விக்கப்பட்டது