பக்கம்:இலக்கண வழிகாட்டி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 12. வைதருப்பம். கௌடம் இந்நெறிகளின் இலக்கணம் தருக. (வி.53) 13. அலங்கார நூலார் கூறும் இரண்டு நெறியினர்க்கும் உடம்பாடாக அமைந்த குணங்களை எழுதுக. (எம்.ஏ.52) அல்லது கௌட நெறிக்கும் வைதருப்ப நெறிக்குமுள்ள பொது இயல்புகள் யாவை? (வி.59) செய்யுள் நெறி வைதருப்பம், கௌடம் என இரண்டு வகைப்படும். வைதருப்ப நாட்டுப் புலவர் பெருமக்களால் விரும்பிக்கொள்ளப்பட்ட நெறி வைதருப்ப நெறியாகும். இந்நெறி இனிய சொல்லாலும் பொருளாலும் வரப்பெறும். இது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம்,ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை,காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். இவை குண அலங்காரங்கள் அல்லது குணவணிகள் எனப்படும். கௌடநாட்டுப் புலவர்களால், கொள்ளப்பட்ட நெறி கௌட நெறியாகும். வைதருப்ப நெறி பத்தனுள்ளும் சிலவற்றோடு கூடியும் சிலவற்றோடு மாறுபட்டும் இந்நெறி வரப்பெறும். கடினமான சொல்லையும் பொருளையுமே இந் நெறியினர் பெரும்பாலும் விரும்புவர். மேலே கூறிய குண அணிகளில் ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை,சமாதி ஆகிய நான்கும் பொரு ளின்பமும் இருநெறியாளர்க்கும் உடம்பாடாக அமைந்த குணங்களாகும். குணவணிகள் 14. குணவணிகளைப்பற்றி ஒரு கட்டுரை வரைக. (வி. 50 அல்லது