பக்கம்:இலக்கியக் கலை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை 83 உண்மையை ஆராயுமிடத்து, அவ்விசையும் இலக்கியத்தின் கலைத் தன்மையை நமக்கு உட்செலுத்தும் ஒரு சாதனமாக, வாகனமாகப் பயன்படுகிறதே தவிர அது கலையன்று. ஏறத் தாழக் கலையின் புறப்பகுதியும் அகப்பகுதியும் ஒன்றாக ஆகி விடுகின்றன. புறப்பகுதியாக அமைந்துள்ள சொல்லும் அகப் பகுதியாக அமைந்துள்ள சொல்லின் பொருளும், அப் பொருளால் தோன்றும் அநுபவமும் ஒன்றாகவே அமைந்துள்ளன. சொல்லைப் படித்து இன்புற்றுப் பிறகு நமக்கு அனுபவம் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக இரண்டும் ஒன்றாகவே தோன்றுகின்றன. இரண்டும் வெவ்வேறானவை எனினும் பிரிக்க முடியாதபடி அவை ஒன்றாய்க் கலந்துள்ளன. இதனை நன்குணர்ந்த காளிதாசன். சொல்லும் பொருளும் போல உள்ள உமை யொருபாகனை இறைஞ்சுதும்' என்று பாடினான். இறைவனையும் உமாதேவியையும் சொற்பொருளும் சொல்லும் ஆவர் என்னும் கருத்துப்பட்டப் பரஞ்சோதி முனிவர், "என்னை இகழ்ந் தனனோசொல் வடிவாம் கின் இடம் பிரியா இமையப் பாவை தன்னையுஞ் சொற் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்குயாது என்னா' (இப் பாடலில் சொல்வடிவாய் இருப்பவள் இறைவி என்றும் சொற்ப்ொருள் வடிவாய் இருப்பவன் இறைவன் என்பார்.1 என்று கூறுகிறார். பிற்காலத்தெழுந்த அபிராமியந்தாதி என்னும் நூலிலும், - . . . . சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே 18...... , ←£ᏍᏑ வருதல் அறிதற்குரியது. இதே கருத்தை வடமொழிக் கவிஞன் காளிதாசனும் கூறியுள்ளளான். இவ் விரண்டு உதாரணங்களாலும் இந் நாட்டவர் சொல்லும் பொருளும் பிரித்துணர இயலாதவை என்ற உண்மையைப் பன்னெடுங்காலம் முன்னரே கண்டிருந்தனர் என்பதை அறியலாம், மேலும் கவிதையில் சுட்டப்படும் பொருளாக உள்ளவனும் மனிதனே ஆவான். ஏனைய நுண்கலைகளோடு சிறிது வேறுபாடு - உடையது கவிதைக்கலை. கட்டிடக்கலையில்" ஒன்றல் வெளியே உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/101&oldid=750905" இலிருந்து மீள்விக்கப்பட்டது