பக்கம்:இலக்கியக் கலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இலக்கியக் తీ;థh6ు ஒவியத்தில், நிழலும் ஒளியும் சேரும் தன்மையில் ஒன்றல் தன்மை உள்ளது. இசைக்கலையில் மட்டும் ஒன்றலே உயிர் நாடியாக உள்ளது. ஈண்டுக் கலைக்குப் பயன்படும் கருவியும் கலையும் வேறல்ல கருவியே கலையாகும் இடம் இச்ையே. இந்தத் தன்மையே கவிதைக்கும் பொருந்தும். மேலும் சிற்பத்தில் பருவுடலின் வடிவம் காட்சியளிக்கிறது. ஒவியத்தில் நிழல் தன்மையுள்ள உருவம் உணர்ச்சியோடு கலந்து வெளிப்படுகிறது. இசையில் உணர்ச்சியும் விருப்பமும் தோன்றுகின்றன. ஆனால், கவிதையில்தான் மனிதன் முழுத்தன்மையோடு காட்சியளிக்கிறான். இயற்கையைப் பற்றியும் கவிதைகள் உளவே அங்ங்ண மிருக்க கவிதையில் மனிதனே காணப்படுகிறான் என்று கூறல் பொருந்துமா எனக் காண்போம். இயற்கையைப் பற்றிய கவிதைகளிலும் இயற்கை அவ்வாறே கூறப்படுவதில்லை. அதற்கு மறுதலையாக, மனித மனத்தில் இயற்கை வரைந்த ஒவியத்திற்கு அவன் எவ்வாறு பிரணு பலிக்கிறான் என்பதே கூறப்படுகிறது. எனவே, இயற்கை பற்றித் தோன்றும் கவிதைகளிலும் அவன் இயற்கையினிடத்து ஈடுபடும் தன்மையும், அதனிடத்து அவன் கொண்ட நம்பிக்கையும் அதனை அவன் காணும் காட்சியும், அதன் விரிவில் அவன் அடையும் வியப்புமே குறிக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் இயற்கையை உள்ளவாறு கூறுவதானால் அது நிழற்படம் எடுக்கும், நகல் செய்யும்தி றமாய் அமையுமே தவிரக் கலையாக ஆகாது. கவிஞன் தன்மனத்தில் இயற்கைதோற்றுவிக்கும் காட்சியையே கவிதையாக வடிக்கிறான் என்பதை அறிய அதிக தூரம் தேடி அலையவேண்டாம், இயற்கையில் தானாக நடைபெறும் எந்தச் செயலையும் அப்படியே கவிஞன் கூறுவதில்லை. அதன் மறுதலை யாக அச்செயல் தன் மனத்தில் என்ன கருத்தைத் தோற்றுவித்ததோ அதனையே கூறுகிறான். கையேயி வரம் பெற்றுவிட்டாள். தசரதன் மூர்ச்சித்து வீழ்ந்து கிடக்கிறான். இந்நிலையில் பொழுதுவிடிகிறது. கோழிகள் சிறகடித்துக் கொண்டு எழுந்தன. காலைக் கதிரவன் சிவப்பு நிறமுடையவனாய்க் கீழ்த்திசையில் தோன்றினான். கோழி சிறகடித்து எழுதலும், கதிரவன் குணதிசையில் சிவந்த நிறத்துடன் தோன்ற்லும் அன்றாடம் நடைபெறும் செயல்களே. அவற்றைக் காணும் நம் மனத்தில் அவை எத்தகைய புதுமையையும் தோற்று விப்பதில்லை. - - - இயற்கையில் அன்றாடம் நடைபெறும் இதே &ml off கவிஞனுக்குப்புதிய கருத்தை நகுகின்றது. கோழி ஏன் சிறகுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/103&oldid=750907" இலிருந்து மீள்விக்கப்பட்டது