பக்கம்:இலக்கியக் கலை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sö இலக்கியக் கலை அரிஸ்டாடில் தம்முடைய கவிதைஇயலில் (Poetics) கற்பனை இலக்கிப்த், தின் இயல்புகளையும், அதன் சிறப்புமிகு பண்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து, இலக்கியம் போலி மயமானது' எனும் கருத்தின் தவற்றை அரிஸ்டாடில் தெளிவுறுத்தியுள்ளார். முதல் நான்கு இயல்களில், அரிஸ்டாடில், போன்மைப்பண்பை' அதாவது மெய்ம்மையைப் படி எடுக்கும் முறையைப்பற்றி விளக்கி யுள்ளார். - - - "கலைஞர்கள் விதிமுறை அறிவினாலோ செய்முறைப் பயிற்சியினாலோ படைப்புத் தொழிலைச் செய்கின்றனர். இவர் களில் சிலர் பொருள்களின் வடிவையும், வண்ணத்தையும் :போன்ன்ம முறையில் ப்டைக்கின்றவர். அதாவது வடிவத் தையும் வண்ணத்தையும் வாயில்களாகக் கொண்டு பொருள். களைப்படைக்கின்றனர்' - --- இங்குக் கலைப்படைப்பின் வடிவம், ஒரு முன்மாதிரியைக்-கருவி யாகக் கொண்டு படைக்கப்படும் உண்மையை அரிஸ்டாடில் உடன் படுகிறார். அடுத்துக் கலைஞர்கள் மானிடவாழ்க்கையைத்தான், போன்மை வழியில், படைக்கின்றனர். அவ்வாறு படைக்கும் இடத்து மத்தளை நல்லவர்களாகவும் தியவர்களாகவும் கலைஞர் தில், வாழ்க்கையும், கலைமாந்தரும் போன்மைப் படைப்புகளாக அமைவதை அவர் ஒப்புக் கொள்ளுவதைக் காணலாம். இக்கவிதையின் தோற்றம் பற்றிய விளக்கத்தில் கவிதையின் தோற்றத்திற்குப் பொதுவாக இருவகைக் காரணங்களைக் கூறலாம். ஒன்று போன்மைப் பண்பு. மற்றொன்று போன்மைப் பண்பால் விளையும் . படைப்பைக் கண்டு மனித உள்ளத்தே தோன்றும் மகிழ்ச்சி" என்று அவர் தெளிவுறுத்தியுள்ளார். மேலும், "இப்பண்பு குழந்தைப் பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. பிறரைப்பார்த்து, அவருடைய நண்டல் பேச்சு முதலியவற்றைக் குழந்தை கற்றுக்கொள்ளுகிறது. இவ்வாறு ஒன்றைப்பார்த்து, அதைப்போலவே செய்யக் கற்றுக்கொள்வதில் மனிதன் பிற உயிர்கள்ைவிட்ச் சிறந்து விளங்குகிறான் : மீனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/109&oldid=750913" இலிருந்து மீள்விக்கப்பட்டது