பக்கம்:இலக்கியக் கலை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும்வாழ்க்கையும் 93 கவிதைக் கலையாகும். குறிப்பிட்ட ஒருவகைக் கற்பனை அகத்தெழுச்சிக்கு வண்ணமும் வடிவமும் தருவதிலேயே, கவிதைக் கலை அல்லது இலக்கியக் கலை முழுமையாக ஈடுபடு கிறது. கலையின் வெளிப்பாட்டிற்கு மனித உள்ள்த்தில் துடிப்பு களே காரணமாக-உந்துதல் சக்தியாக அமைகின்றன. கற்பனையும் வாழ்க்கையும் இதனால், வாழ்க்கையை உள்ளவாறே ஓரளவிற்குக் கற்பனையில் படைத்துக்காட்ட இயலுகிறது. அந்தக் கற்பனைத் திறனை இயக்கும் உள்ளத்துடிப்பு, வாழ்க்கை எப்படி இருக்கக்கூடும் எனும் இலட்சிய நோக்குடன் கற்பனை செய்யு மாறு உந்துகிறது, இந்நிலையில்தான், கவிதையைப் பேரார்வத் துரண்டுதல் வாய்ந்ததாக மாற்றும் இரசவாதமாகக் கற்பனைத் துடிப்பு அமைகிறது. இலக்கியத்தில் மெய்ம்மை

  • இலக்கியத்தில் Guntuhenin' (Realism) எனும் பொழுதும், இந்தச் செயற்பாட்டுக் கூறே உண்மையாக அமை கிறது. உலகியல் சார்ந்த வாழ்க்கை பெரிதும் உணர்ச்சிக் கிளர்ச்சி ஊட்டுவதாக அது மூலத்தின்-நடைமுறை உலகில் காணப்படுவதால், க்ற்பனைசெய்யப்படும் வாழ்க்கையும் உண்மையாகவே தோன்றுகிறது. நடைமுறைத் தன்மையின் சிறப்பற்ற கூறுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, வெறும் நடை முறை வாழ்வில் சிறப்பியல்புகளிலேயே கற்பனை கருத்தைச் செலுத்துகிறது. இந்த ஒரு செயற்பாடே, கவிதையை அல்லது இலத்கியத்தைப் பிளேட்டோ பாவித்ததைப் போன்ற உலகத்தின் போன்மை என்பதில் இருந்து அடிப்படையி லேயே வேறுபட்டதாகக் காட்டுகிறது. எனவே, பிளேட்டோ இலக்கியத்தைப் போன்மையிலும் போன்மை என்று கண்டித்தமை பொருத்தமற்றதாகப் ப்ேர்ய் விடுகிறது:

வாழ்க்கையின் தற்செயல் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பாக. நிகழக்கூடிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தனவாகக் காட்டும் மெய்ம் மையும் அரிஸ்டாடிலின் தேவையை நிறைவேற்றுவதாக அமையவில்லை. எனவே, அதைத் தம்முடைய கண்ணோம் இடத்தில் அரிஸ்டாடில் வேறுபடுத்திக் காட்டுகிறார். - கவிதைப் பொருள்கள் உணர்த்தும் உண்மைகள் உலகப் பொதுமையைத் தழுவுவனவாக அமையும். வரலாறு கூறும் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடங்களில் நிகழ்ந்த சில குறிப்பிட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/111&oldid=750916" இலிருந்து மீள்விக்கப்பட்டது