பக்கம்:இலக்கியக் கலை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இலக்கியக் கல்ை வட்டர்ர விவரங்களாகவே இருக்கும். ஆகவே, கவிதை வரலாற்றி னும் மிக்க் தத்துவார்த்தமும் அதனினும் சீர்த்த இன்றியமையாமை யும் உடையது. . . . . . . - 'கவிதை உண்மை, உலகப்பொதுமையைத் தழுவி நிற்பது என்று கூறினோம். உலகப்பொதுமையைத் தழுவி நிற்றலாவது என் கருத்துப்படி, குறிப்பிட்டபரத்திரம், குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறு தான். பேசுவான்; இன்னவாறுதான் நடந்துகொள்ளு வான் என்று கருதும்ாறு படைத்துக் காட்டுதலாகும். இவ்வாறு 'ப்டைத்துக் காட்டுவதே கவிதையின் நோக்கம்: - - - இங்கு இலக்கியத்தில் இடம்பெறும் உண்மை எத்தகையது என்பதை அரிஸ்டாடில் தெளிவுறுத்தியுள்ளார். வரலாற்று ஆசிரியர் கால வரன்முறைப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கறுவது மெய்ம்மையை அடுக்கிக் கூறுவதாகும். இதனை நரம் கவிதையில் காண இயலாது என்று இவர் தெரிவிக்கிறார். இதைப் போன்றே இவ்விருபதாம் நூற்றாண்டில், புதிய ைடப் பா ளர் க ள் சிறப்பாகப் போற்றும் நடப்பியல் மெய்ம்மையைதயும் அதில் காண இயலாது என்பதும் உய்த் துணரத் தக்கதாகும். மொத்தத்தில் உலக வாழ்க்கையைப் புகைப்படம் போன்று அப்படியே கவிதை பிர திபலிக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும். - நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் காலவரன்முறையில் தொகுத்துக் கூறுவது அல்லது அவற்றை மட்டும் விளக்கிக் கூறுவது கவிஞனு டைய வேலை அன்று. ஆனால், தேவைப்படும் பொருள்களின் அல்லது நிகழத்தக்க நிகழ்ச்சிகளின் இயல்பாக நடைபெறக்கூடியன வற்றைத் தேர்ந்து எடுத்து, அவற்றைமட்டும் கற்பனை வண்ணத் தில் குழ்ைத்துத் தருவதே கவிஞனுடைய பணியாகும். இந்தக் 'க்ாரணத்தினால், பெரிதும் தத்துவ இயல்பு உடையதாகவும்" பெரிதும் கருத்தாழ்வு ஆர்வம் உடையதாகவும் கவிதை’, 'வரலாற்றில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது. வரலாறு குறிப் பிட்ட இந்த நிகழ்ச்சியையோ, அந்த நிகழ்ச்சியையோதான் எடுத் துரைக்கும். ஆனால், கவிதையோ, உலகப் பொதுமையைப் பற்றியே பேசுகிற வரலாறு மெய்ம்மை (Facts) அடிப்படையில் இயங்க கவிதை உண்மை (Truth) அடிப்படையில் இயங்குகிறது. இவ்ை இரண்டின் இடையில் உள்ள் வேறுபாடு இதுவே. உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/112&oldid=750917" இலிருந்து மீள்விக்கப்பட்டது