பக்கம்:இலக்கியக் கலை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கியக் கலை வாய்ந்த ஒன்றாகத் தொல்காப்பியர், காட்டமுயன்றதை நினைவில் கொள்ளுவோமாக. அதனைப் புலனெறிவழக்கம் என அவர் சுட்டியுள்ளார். 'நாடக வழக்கினும உல்கியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (தொல்.பொ.அகத் 58) எனும் நூற்பாவின் நுட்பமான பொருளை ஒர்க: வரலாற்றுக் கால்ம் நெடுக, தமிழ் அறிஞர்கள் இடையே "புலனெறி வழக்கு” என்பதுபற்றித் தோன்றியுள்ள எண்ணப் போக்குகளை இங்குத் தொகுத்துக் காண்டோமானால், அடிப்படை உண்மைகள் சில புலனாகும். இலக்கியத்தில் இடம் பெறும் வழக்கே புலனெறி வழக்கு” என்பதைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வாயிலாக அறிகி றோம். புலம், எனும் சொல்லிற்கு அறிவு என்பது பொருள். இதனை வேர்ச்சொல்லாகக் கொண்டே புலமை', 'புலவர் எனும் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. புலமை’ எனும் சொல் அறிவையும்', 'புலவர்' எனும் சொல் அறிவுடையல்it எனும் பொருளையும் தருவனவாகவே, தமிழருடைய சிந்தனை வளர்ச்சி யில் தொடக்க காலத்தில் கருதப்பட்டன. ஆனால், காலப்போக்கில் ப்ர்ட்டியற்றும் பாவலனை - கவிஞனைச் சுட்டுவதற்குரிய சொல் லாகப் புலவர் என்பதை வழக்கலாயினர். - - தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கத் தினை customiconvention) மூன்று வகையாகப் பாகுபடுத்தி இருந்தனர். இதனை மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா தெரிவிக்கிறது. வழக்கம், என்பது சமுதாயத்தின் கட்டுக் கோப்பிற்குட்பட்டு வாழ்க்கையில் மனநிறைவைப் பெற மக்கள் கடைப்பிடித்து ஒழுகும் ஒழுக்கத்தால் அமைவது. பன்னெடுகாலமாகப் பழக்கத்தில் இருந்துவரும் சிறந்த நெறியே, வழக்கம்' எனப்படுவதாகும். உயர்ந்தோர்களாவிய சான்றோர்கள் இடத்துத் தோன்றி நிகழ் அனவே வழக்கு எனப்படும். * - "வழக்குஎனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான" (தொல்.பொ.மரபு.63) உலக மக்கள் யாவரும் அறியத் தோன்றுவது வழக்கு. அவர்களை நெறிப்படுத்தி மு ைற ய க வாழச்செய்வது வழக்கு: அது தகுதிவழக்கு', 'இயல்பு வழக்கு எனத்தனி மனிதனின் ஒழுகலாற்றை அடிப்படையாகக் கொண்டு வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/114&oldid=750919" இலிருந்து மீள்விக்கப்பட்டது