பக்கம்:இலக்கியக் கலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . இலக்கியக் 峪岔余} ஆழமாகக் கண்டறிகிறான் எனும் தம்முடைய கருத்தினை அரிஸ்டாடில் நிலை நாட்டியுள்ளார். - "கலை என்பது எதையும் படி: எடுப்பது இல்லை! அது படைப்புப் பணியிலேயே ஈடுபடுகிறது இந்தப் பண்பே, கலையின் மாபெரும் சிறப்பிற்குக் காரணமாகும்' என்பது சிட்னியின் தெளிந்த முடிவாகும். "வெறும் மெய்ம்மைத் தோற்றங்களை இலக்கியம் படி எடுக்கவில்லை; பொருள்களின் நடப்பியலின் - பின்னால் மறைந்து கிடக்கும் உண்மையையே வெளிப்படுத்திக்காட்ட கலை முயலுகிறது' என்பது இவருடைய வாதமாகும்." நடைமுறை வாழ்க்கையின் இன்னல்களிலும் இடர்ப்பாடு களிலும் இருந்து விடுபட்டு, மன ஆறுதல் பெறுவதற்குத் தப்பி யோடும் உலகினை இலக்கியம் அமைத்துத் தருவது இல்லை. இது கற்பன்ை இலக்கியப் படைப்புகளின் செயற்பாடும் அன்று. துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவுவதே இலக்கியம்' (Escapist Literature) என்பது இனிமை மிகுந்ததும் பரவலாக வழங்கிவரும் கருத்துமாகும். பெரும்பாலான நூல்களும் புதினங் களும் இதழ்களும் இந்த நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. திரளான வாசகர்களும் இந்த நோக்கிலேயே அவற்றைப் படிப்பதை யும் நாம் காணுகின்றோம். ஆனால், இது உண்மைக்குப் புறம்பான குறை மதிப்பீடு என்பது இவருடைய கருத்து. கவிஞன் படைக்கும் உலகம் இலட்சியக்கனவுகளால் உருவாக் படும் உலகம்; நட்ைமுறை உலகைவிடப் பலவகையிலும் சிறந்தது. மற்றும் அந்தப் புதிய உலகை அடையவேண்டும் எனும் அகத் தெழுச்சி.பெற்று மனிதனைச் செயல் படுமாறும் அதைப்போலச் செய்யவேண்டும எனும் எண்ணத்தைச் செயல்படுமாறும் தூண்டும் வகையிலும் இலக்கியம் படைக்கப்படுகிறது" என்பது சிட்னியின் உறுதியான நம்பிக்கையாகும். இவ்வாறு, அரிஸ்டர்டில் அறிவித்த படி எடுக்கும் பண்பு, படைப்பாளி இடமிருந்து வாசகனிடம், சிட்னியால் மாற்றப்படுகிறது. இந்தச் சிந்தனைப்போக்கின் முடிவாக கவிஞன் எதையும் படி எடுக்கவில்லை; - அவன் படைக்கிறான், கவிஞன் படைத்து ஆரித்துள்ளதை வாசகனே படி எடுக்க போன்மையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/120&oldid=750926" இலிருந்து மீள்விக்கப்பட்டது