பக்கம்:இலக்கியக் கலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கியக் கலை நயத்தையும் (Rhyme) கேர்வத்தையும் (Pattern) பெரிதும் விரும்புகிற்து. இதனால் நிலைபேற்றுத் தன்மையைக் கலை அடைகிறது. இவற்றைவிடக் கருத்துடன் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் முறையில் கலை செம்மையாகச் செயல்படுகிறது. புலக்காட்சியின் பயனைக் கலைபெரிதும் போற்றுகிறது! முழுமையும் தெளிவான உள்ளுணர்வில் இருந்து எழும் தீர்ப்பே 'அது வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கிறது' எனும் கருத்தாகும், ஒவியன் ஒருவன், மனிதன் ஒருவனைப் படம் வரைகிறான் என்றால், அவன் உயிருள்ள மனிதனை, அப்படியே வரைந்து விட்டான் என்பது பொருள் அன்று. உயிருள்ளதற்கு அறிகுறியான மூச்சுவிடுதலை அந்தப் படத்தில் காண இயலாது. ஆனால், செம்மையாக அவனுடைய பணியைச் செய்து முடிப்பானாகில், 'மனிதனின் படத்தை நன்றாக வரைந்து இருக்கிறான் எனச் சொல்லுவோம். அந்த மனிதனுடைய படத்தில், அதை வரைந்த ஒவியனுடைய சிற்சில ஆளுமைக்கூறுகள் அவனை அறியாமலேயே இடம் பெற்றுவிடும். . எனவே ஆர்னால்ட் சொல்லியதைப்போல, வாழ்க்கையைத் திறனாய்வு செய்து காட்டுவதே படைப்பாளியின் நோக்கமாக அமைகிறது. அவனுடைய உணர்வில், வாழ்க்கை அனுபவங்கள், உணர்வுகள் கூட்டம் கூட்டமாகக் குவிந்துள்ளன. தனக்கேயுரிய ஒரு புதுமையான நோக்கில் அவற்றைக் காண அவன் முயலுகிறான். அந்தப் பார்வை அகன்றும் ஆழ்ந்தும் கூரொளி வாய்ந்ததாகவும் அமைகிறது. இதன் பயனாக இன்பதுன்ப உணர்வுகளும், ஏளனமும், முறுவலும், பரிவும் பாசமும் வாழ்க்கையின் மீது அவனுக்குத் தோன்றுகிறது. இவற்றை மற்றவர்கள் பார்த்து மகிழுமாறு தனக்குப் பிடித்த படைப்பு வாயில்களின் மூலம், கவர்ச்சிமிகு கோலங்களில் அவன் படைத்து அளிக்கிறான். இமமுறையனால், கலைப்படைப்பு நடைமுறை வாழ்க்கையின் மெய்ம்மை'யைப் பல கோணங்களில் படம்பிடித்துக் காட்டுகிறது. கலைப் படைப்பில் இடம்பெறும் உண்மை (மெய்ம்மையைப் பாங்கு), உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படும் 9துல்விளக்க ஆதாரமாக இருப்பது இல்லை. தென் ஆவேசத்தில் வெளிப்படும் அகத்தாண்டுதலின் பேரற்றல் r அதைக் கருத இயலாது. அருணகிரியாரும் குமரகுருபரரும் இத்தகைய திெல் வி , தி யு ண ர் வின் உந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/128&oldid=750934" இலிருந்து மீள்விக்கப்பட்டது